போலி சுவாமி சிலைகளை ரூ. 50 லட்சத்திற்கு விற்க முயன்ற வங்கி ஊழியர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூரில் போலி சிலையை விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நேதாஜி சாலையில் இயங்கி வரும் தேசிய வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் தமிழரசன் என்பவர், சுவாமிமலைக்கு சென்று பித்தளை உலோகத்தால் ஆன நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிலைகளை 75 ஆயிரம் ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கியுள்ளார். இதனை அதிகவிலைக்கு விற்கும் நோக்குடன் அந்த சிலைகள் மீது முலாம் பூசி மிகவும் சக்தி வாய்ந்த பழைமையான சிலை என சமூகவலைதளத்தில் தகவல் பரப்பியுள்ளார். மேலும் இதனை காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கவாஸ்கர் என்பவருக்கு 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார். அது போலி சிலைகள் என கவாஸ்கருக்கு தெரியவந்ததை அடுத்து அவர் திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தமிழரசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போலி சிலைகளை மீட்டனர்.

Night
Day