உலகிலேயே மிக உயரமான 77 அடி உயர ராமர் சிலை திறப்பு - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் மிக உயரமான, 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தெற்கு கோவா கனகோனாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோகர்ன் பர்தகலி ஜீவோத்தம் மடத்தின் வளாகத்தில் 77 அடி உயர உலகின் மிக உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. திருவுருவச் சிலை திறப்புக்கான ஆரம்பகட்ட பூஜைகள் ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் மடத்தின் 550வது ஆண்டு விழாவான சர்த பஞ்ச சதமனோத்சவ நிகழ்வில் இன்று பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு நிறுவப்பட்டுள்ள 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை திறந்து வைத்தார். குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ஸ்ரீ ராமரின் சிலையை உருவாக்கியுள்ளார்.  
ராமரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்த பின்னர், ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ன் பர்தகலி ஜீவோத்தம் மடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்.

Night
Day