லட்ச காந்த கீதை பாராயணம்... பிரதமர் மோடி பங்கேற்பு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் சாலை வலம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காகவும், கீதா மந்திரில் நடைபெறும் பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து உடுப்பி சென்றார். தொடர்ந்து பன்னஞ்சேவில் இருந்து கல்சங்கா வரை சாலை வலம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, இருபுறமும் திரண்டிருந்த மக்கள், பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உடுப்பியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு மாலை அணிவித்து கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுவர்ண தீர்த்த மண்டபத்தையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, பகவத் கீதையில் இருந்து ஒரு லட்சம் பேர் மந்திரங்களை பாடிய போது இந்தியாவின் தெய்வீகத் தன்மையை இந்த உலகம் கண்டதாக கூறினார். தெய்வீக வார்த்தைகள் ஒரே இடத்தில் எதிரொலிக்கும் போது வெளியாகும் ஆற்றல் மனதுக்கும், உடலுக்கும் புதிய பலத்தை தருவதாக குறிப்பிட்ட அவர், இந்த ஆற்றல் ஆன்மீகம் மற்றும் சமூக ஒற்றுமைக்குப் பின்னால் உள்ள சக்தி என்றும் தெரிவித்தார்.  ஜனசங்கத்தின் கர்மபூமியாகவும், பாஜகவின் நல்லாட்சி மாதிரியாகவும் உடுப்பி இருந்து வருவதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

Night
Day