"விண்வெளி துறையில் முன்னேற்றங்களை கொண்டு வரும் தனியார் துறை" - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பில் தனியார் துறை பெரும் முன்னேற்றங்களை கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாக தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், நாட்டின் விண்வெளித் துறை, முன்பு எப்போதும் இல்லா அளவுக்கு வாய்ப்புகளை தற்போது கொண்டுள்ளதாக கூறினார். ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகம் இந்தியாவின் புதிய சிந்தனை, புதுமை மற்றும் இளைஞர் சக்தியை பிரதிபலிப்பதாக கூறிய பிரதமர் மோடி, நமது இளைஞர்களின் புதுமை, தொழில்முனைவு ஆகியவை புதிய உயரங்களை எட்டுவதாக பெருமிதம் தெரிவித்தார். இன்று துவங்கப்பட்ட திட்டம் எதிர்காலத்தில், உலகளாவிய செயற்கைக்கோள் ஏவுதள சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தியா ஒரு தலைமையாக வெளிப்படும் என்பதன் பிரதிபலிப்பாகும் என்றும் அவர் கூறினார். 

Night
Day