நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம், திறந்தவெளி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் 144 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அவைகள் லாரிகள் மூலம் வெளி மாவட்ட அரவைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதன்படி, இந்த ஆண்டு அரவைப் பணிக்கு அனுப்புவது தாமதம் ஏற்பட்டதால் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைய துவங்கின. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சித்தர்காடு, மல்லியம், எருக்கூர் மாணிக்கபங்கு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் குடோன்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டன. 

சமீபத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, திறந்தவெளியில் சேமிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து முளைக்க தொடங்கின. குறிப்பாக, சித்தர்காடு சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்ட 2 ஆயிரத்து ஐநூறு மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, நெல் அரவைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day