சென்னைக்கு 700 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் - அமுதா

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னையில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது டிட்வா புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் இது நிலைக்கொண்டுள்ளதாகவும் கூறினார். வடகிழக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயல் நிலவக்கூடும் எனவும் அமுதா தெரிவித்தார்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறிய அமுதா, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்டும் விடுத்தார். ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் காரைக்கால் பகுதிக்கும் நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மைய தலைவர், வரும் 29ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் கொடுத்தார். அன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மித மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் அமுதா விடுத்துள்ளார். வரும் 30ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த அமுதா, மற்ற மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளை தவிர்க்க மீனவர்களுக்கு அறிவுறுத்திய அமுதா, அடுத்த 5 தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறினார். சென்னையை பொறுத்தவரை இன்றும், நானையும் வானம் வேகம் மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான முதல் மினதான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

Night
Day