பெண்களிடம் 20.5 சவரன் தங்க செயின் பறிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதியதாக கட்டப்பட்ட சிவன்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மூன்று பெண்களிடம் சுமார் 20 சவரன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். 
வசந்த் நகர் பகுதியில் புதியதாக சிவன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி புஷ்பா என்பரிடம் 6 சவரன், ராணி என்பவரிடம் 3.5 சவரன் மற்றும் மீனா என்பவரிடம் 11 சவரன் நகை என மொத்தம் 20.5 சவரன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day