பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை - ஒருவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பள்ளியின் தற்காலிக பெண் ஆசிரியரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த காவியா என்பவர் ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். பாபநாசம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரும் காவியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவியாவிற்கு வேறு ஒரு நபருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக தெரியவந்ததால், அஜித்குமார் ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காவியாவை வழிமறித்த அஜித்குமார் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day