தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இரட்டைக்கொலை அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விளம்பர திமுக ஆட்சியில் அதிகரிக்கும் கொலை சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் அதே பகுதியை சேர்ந்த மந்திரம், முருகன் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அங்கு காப்புலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஆயுள் தண்டனை கைதி கோமு பாண்டியன் என்பவரும் சென்றுள்ளார். அப்போது தனது மைத்துனர்களான மந்திரம், முருகன் ஆகிய இருவரிடமும் குடும்ப பிரச்சினை தொடர்பாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரம் அடைந்த கோமு பாண்டியன், கூர்மையான அரிவாளால் மைத்துனர்கள் இருவரையும் கொடூரமாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து இருவரும் சரிந்து விழுந்த போதிலும் கோமு பாண்டியன் வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மந்திரம் என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் டாஸ்மாக் பாரில் இரட்டைக்கொலை அரங்கேறிய அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இந்த இரட்டை கொலைச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முன்னாள் ஆயுள் தண்டனை கைதியான கோமு பாண்டியனனை பிரிந்து அவரது மனைவி தங்கத்தாய் மற்றும் மகன் மாடசாமி ஆகியோர் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு மைத்துனர்களான மந்திரம், முருகன் ஆகியோர் தான் காரணம் என கருதிய கோமு பாண்டியன், அவர்களை ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Night
Day