மருத்துவர் வீட்டில் நகை, பணம், வெள்ளி திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கால்நடை மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வத்தலகுண்டு அருகே வசித்து வரும் கால்நடை மருத்துவர் கவின் தனது மனைவியுடன் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 5 சவரன் நகை, வெள்ளி நாணயங்கள், லேப்டாப், ரொக்க பணம் 50 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

Night
Day