கேமரூன் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டைவிட்டு தப்பியோட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேமரூன் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமா நாட்டை விட்டு தப்பியோடினார். 

கேமரூன் நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் 43 ஆண்டுகளாக அதிபராக இருந்த பவுல் பியா மீண்டும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரை எதிர்த்து போட்டியிட்ட இசா ஷிரோமா 35 சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் பவுல் பியா வெற்றியை எதிர்த்தும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் கேமரூனில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமாதான் காரணம் என அதிபர் பவுல் பியா குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமா, காம்பியாவில் தஞ்சமடைந்துள்ளார். 

Night
Day