அதிபர் டிரம்ப் உடன் நியூயார்க் மேயர் மம்தானி சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பரஸ்பரமாக கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜோஹ்ரான் மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற நியூயார்க் நகர மேயர் தேர்தலில், 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின் போது, அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் ஜோஹ்ரான் மம்தானி கடுமையாக விமர்சித்து இருந்தார். குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப், அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார். அதே போல் மம்தானியை டிரம்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்பை, மம்தானி இன்று சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் ஒரு சிறப்பான சந்திப்பை நடத்தியதாகவும், இது மிகவும் நல்ல, பயனுள்ள சந்திப்பு என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேயர் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறாரோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கூறிய டிரம்ப், நியூயார்க் நகரம் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதையே இருவரும் விரும்புவதாகவும் தெரிவித்தார். 

நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு சந்திப்பு என்று கூறிய மம்தானி, எட்டரை மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூயார்க் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்குவதற்காக அதிபர் டிரம்புடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

Night
Day