சட்டவிரோத நிலக்கரி சுரங்க வழக்கில் 24 இடங்களில் ED அதிரடி சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி கடத்தல் தொடர்பான வழக்கில் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர், புருலியா, ஹவுரா மற்றும் கொல்கத்தா மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Night
Day