டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 மருத்துவர்களை கைது செய்தது NIA

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்த குற்றச்சாட்டில் 3 மருத்துவர்கள் உள்பட மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. 

கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை முன்பு கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இவ்வழக்கில் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் மற்றும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த ஜம்மு & காஷ்மீரை சேர்ந்தவரை தேசிய புனாய்வு முகமை கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மேலும் 4 பேரை கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜம்மு & காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் முஸம்மில் சகில் கனாய், அனந்த்நாக் பகுதியை சேர்ந்த மருத்துவர் அதீல் அகமது ராதர், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த மருத்துவர் ஷாகின் சையீத் மற்றும் ஜம்மு காஷ்மீர் சோபியான் பகுதியை சேர்ந்த முப்தி இர்ஃபான் அகமது வாஹே உள்ளிட்ட 4 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேசிய புனாய்வு முகமைக்கு கிடைத்துள்ள தகவலின்படி இன்று கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day