நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் - விவசாயிகள் கவலை

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் அம்மச்சியாபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீரில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமானது.
  
அமச்சியாபுரம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில், பெய்த கனமழை காரணமாக கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வீணாகி கடும் துர்நாற்றம் வீசும் நிலை உருவானதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நெல் மூட்டைகளில் இருந்து ஈரப்பதம் அதிகரித்து நெல்கள் சாக்கு மூட்டையில் பயிர் போல முளைத்து வளர்ந்து காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

Night
Day