தனியார் நிறுவனத்திற்கு எதிராக தூய்மை பணியாளர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சியின் தூய்மை பணிகளை கவனிக்கும் தனியார் நிறுவனத்திற்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபடவோ, கூடுதல் பணிக்கு ஊதியமோ கேட்க மாட்டோம் என்று எழுதி தரும்படி அவர்லேண்ட் கேட்டுள்ளது. இதற்கு எதிராக மதுரை மாநகராட்சி மண்டலங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.

இதை கண்டித்து, தூய்மை பணிகளை புறக்கணித்து மதுரை காளவாசல் பகுதியில் சாலையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவனத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மதுரையின் சுகாதாரம் சீர்கெட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 

Night
Day