ஆசிரியர்கள் திட்டியதால் 9ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வால்பாறை அருகே 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் வசித்து வரும் சக்திவேல் - வல்சா குமாரி தம்பதியரின் மூத்த மகள் சஞ்சனா, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதத்தில் சஞ்சனாவை வகுப்பில் ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மாணவி சஞ்சனா, ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஒருமாதமாக சிகிச்சை பெற்றுவந்த மாணவி, தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day