கோயில் காவலாளிகள் கொல்லப்பட்ட வழக்கு : 2வது குற்றவாளி தப்ப முயற்சி - கை, காலில் எலும்பு முறிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியான முனியசாமி போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலின் காவலாளிகள் இருவர், கடந்த 11ம் தேதி உண்டியல் திருட வந்தவர்களை தடுக்க முயன்ற போது கோயில் உள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டநிலையில், தலைமறைவாக இருந்த முனியசாமி என்பவரை 8 நாட்களுக்கு பின்னர் கைது செய்தனர். அப்போது கோயிலில் திருடப்பட்ட பொருட்களை இரட்டைப்பாலம் பகுதியில் ஒளித்து வைத்திருந்ததை எடுத்து முனியசாமி போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றுள்ளார். இதில் அவருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Night
Day