ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த +2 மாணவி குத்திக்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் சேராங்கோட்டை அருகே, காதலை கைவிட்ட பள்ளியை மாணவியை இளைஞர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் படித்து வந்தார். அந்த மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த போது முனிராஜ் என்ற இளைஞர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை கொடூரமாக குத்தினார். இதனால் நிலைகுலைந்து மயங்கி விழுந்த மாணவி அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனார். ஆனால் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

காதல் விவகாரத்தில் மாணவி உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் மருத்துவமனையில் கதறி அழுதார்.

இதேபோல் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து மருத்துவமனையில் குவிந்த உறவினர்களும் கதறி  அழுதனர். மேலும் இளைஞரின் வெறிச்செயலை கண்டித்து மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறிய உறவினர் ஒருவர், பெற்றோரின் கூறியதால் அந்த மாணவி காதலை கைவிட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கொலையை செய்த முனிராஜை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day