வரலாறு காணாத உச்சம் முட்டை விலை உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 5 காசுகளாக முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து தினமும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்நிலையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அதன்படி 6 ரூபாயாக இருந்த முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 5 காசுகள் உயர்த்தி 6 ரூபாய் 5 காசுகளாக நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ளதால் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day