கார் மரத்தின் மீது மோதி விபத்து 3 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த பயிற்சி மருத்துவ மாணவர்களான சாருன், ராகுல் செபஸ்டியன், முகிலன் உள்ளிட்ட 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கடற்கரை சாலை வழியாக விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்துள்ளது. இதனால் ரோச் பார்க் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில், பயிற்சி மருத்துவர்களான சாருன், ராகுல் செபஸ்டின், முகிலன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், படுகாயமடைந்த கிருத்தி குமார், சரண் ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day