கூட்டுறவு வார விழா - பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்த சின்னம்மா மகளிர் சுய உதவிக் குழுவினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 72 வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சின்னம்மா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் ஏராளமான பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கூட்டுறவுத் துறை சார்பில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டுறவுத்துறை சார்பில் பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இடையே கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 

இந்தப் போட்டிகளில் களப்பாகுளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மா மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 14 பெண்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் மற்றும் 2ம் இடத்தை பிடித்து சின்னம்மா சுயஉதவிக் குழுவினர் பரிசுகளை வென்றனர். 

Night
Day