10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சைதன்யா அப்பார்ட்மெண்ட், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகம், சௌகார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் வீடு,  சைதாப்பேட்டையின் ஸ்ரீநகர் காலனி தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள ஷாம் தர்பார் அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அம்பத்தூர் திருவேங்கட நகர் சதர்ன் ரோடு பகுதியில் வசித்து வரும் வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் வீட்டிலும்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேகே நகர் லட்சுமண சாமி சாலையில் உள்ள  தங்க வியாபாரி சேட் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day