தமிழகத்தில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 28 பேர் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் நாய்கள் தொந்தரவு அதிகரித்து மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இதுவரை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, கடந்த ஆண்டு 43 பேர் நாய்கடியால் உயிரிழந்த நிலையில் இந்தாண்டு 28 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே ரோபிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் ஏஆர்வி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் நாய் தனது நகத்தால் கீறினாலோ அல்லது நாக்கை வைத்து தடவினாலோ கூட RIG என்று சொல்லக்கூடிய Rabies Immunoglobulin என்ற 3ஆம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது என்றும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதேபோன்று, நாய்க்கடியில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நான்கு டோஸ் ஏஆர்வி தடுப்பூசியை அட்டவணைப்படி செலுத்தி கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

செல்ல பிராணிகள், பழக்கமான நாய்கள் கடித்தது என அலட்சியமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும் என எச்சரித்துள்ள பொது சுகாதாரத்துறை, நாய்கடி விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் உரிய சிகிச்சை எடுத்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

Night
Day