பிரதமர் மோடி இன்று கோவை வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் நடக்கும் இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று  வரவுள்ளதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள. 

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் இன்று தொடங்குகிறது. வரும் 21ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தருகிறார். புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வரும் பிரதமர் மோடி, மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மேலும் இந்த மாநாட்டில், சிறப்பாக செயல்பட்ட 18 இயற்கை விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார். பின்னர் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிரதமரின் வருகையையொட்டி மாநகர காவல் ஆணையர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் 21வது தவணையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு 3 தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாய் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.


Night
Day