முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 4 முகமூடி கொள்ளையர் கையில் உருட்டுக் கட்டையுடன் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சி வெளியானதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொடையூர் அடுத்த கூலி நாயக்கனூர் கிராமத்தில் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் கையில் உருட்டுக் கட்டையுடன் சுற்றித் திரிந்தனர். கிராமத்தில் உள்ள மாரப்பன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மூகமூடிக் கொள்ளையர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தாலிச் செயினை திருடிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அங்கிருந்த ஒரு வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது முகமூடிக் கொள்ளையர்கள் விநோதமான உடையில் உருட்டுக் கட்டையுடன் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Night
Day