காவல்நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிமருந்துகள் - பலி 9 ஆக உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

பயங்கரவாத சதித் செயல் தொடர்பாக ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் பயங்கரமாக வெடித்து சிதறியதில் காவலர்கள், தடயவியல் நிபுணர்கள் என 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீா், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல்துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 2 ஆயிரத்து 900 கிலோ வெடிபொருள்கள், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் ஹரியானா மாநிலம், ஃபரீதாபாதில் இருந்து மட்டும் 360 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் பணியாற்றி வந்த புல்வாமா பகுதியைச் சேர்ந்த மருத்துவா் முசமில் அகமதை ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஹரியானா காவல் துறை கூட்டாக கைது செய்தன. 

இதைத்தொடர்ந்து விசாரணையின் ஒரு பகுதியாக 360 கிலோ வெடி பொருளை ஜம்மு-காஷ்மீருக்கு காவல் துறை கொண்டு சென்றது. அங்குள்ள நெளகாம் காவல் நிலையத்தில் அந்த வெடி பொருள்களின் மாதிரிகளை காவல் துறையினா் சேகரித்த போது, திடீரென வெடி பொருள்கள் வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் காயமடைந்தனர்.

இதனிடையே நவ்காம் காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடி விபத்தில் காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. வெடி விபத்தின் போது ஏற்பட்ட அதிர்வும், சப்தமும் பல கிலோ மீட்டர் தூரம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.


Night
Day