பிரபல இயக்குநர் வி.சேகர் உடலுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த பிரபல இயக்குநர் வி.சேகரின் உடலுக்கு, திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குநர் வி.சேகர். "பொண்டாட்டி சொன்னா கேட்கணும், விரலுக்கேத்த வீக்கம்" போன்ற வெற்றிப் படங்களை நகைச்சுவை உணர்வுடன் கொடுத்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார். இதனையடுத்து அவரது உடல் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக போரூர் மருத்துவமனையில் இருந்து கோடம்பாக்கம் வீட்டிற்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வி.சேகர் உடலுக்கு நடிகர் சிவக்குமார், கவுண்டமணி, தியாகு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர்கள் பாக்யராஜ், விக்ரமன், ஆர்வி உதயகுமார், ஆர்கே செல்வமணி, பேரரசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மாலை 5 மணிக்கு சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் நெய்வாநத்தம் கிராமத்திற்கு வி.சேகரின் உடல் எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day