ஜடேஜாவைக் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கிய CSK

எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனை டிரேடு முறையில் வாங்கியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அடுத்த மாதம் நடைபெறும் மினி ஏலத்துக்கு முன்பாக டிரேடிங்கில் வீரர்களை வாங்கும் பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்துவிட்டு, அந்த அணி வீரர் சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கவுள்ளதாக பேச்சுக்கள் அடிப்பட்டது, தற்போது அதை உறுதி செய்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

இதன்படி ராஜஸ்தான் அணியில் இருந்த சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைகிறார், ரவீந்திர ஜடேஜாவும், சாம் கரணும் ராஜஸ்தான் அணிக்கு செல்கின்றனர். சஞ்சு சாம்சன் இஸ் எல்லோவ், அன்புடன் வெல்கம் சேட்டா என எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே அணி பதிவிட்டுள்ளது. சிஎஸ்கேவில் தளபதியாக இருந்த ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்வதால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day