தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைன் இயல்பை விட 7 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 7% குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக 276.8 மில்லி மீட்டர் மழை பொழியும் நிலையில், இன்று வரை 257.5 மில்லி மீட்டர் மழை மட்டுமே பொழிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சென்னையில் இயல்பை விட 24% குறைவாகவே பருவமழை பெய்துள்ளது. வழக்கமாக 507.1 மில்லி மீட்டர் மழை பொழியும் நிலையில், தற்போது வரை 384.3 மில்லி மீட்டர் மழை மட்டுமே பொழிந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Night
Day