4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில், இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day