நடிகர் விஷாலின் கடனை திருப்பி செலுத்தும் வழக்கு : நீதிபதி விலகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை 30 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இருந்து நீதிபதி ஜெயசந்திரன் விலகியுள்ளார். 

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்ச ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. இந்நிலையில், இந்த தொகை, முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட  நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க ஒப்பந்த போடப்பட்டிருந்தது,.  ஒப்பந்தத்தை மீறி படங்களை வெளியிட்டதாக கூறி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் லைகா நிறுவனத்திற்கு 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து  விஷால் தரப்பு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் மும்மினேனி சுதிர்குமார் அமர்வு விசாரித்தது. அப்போது, வழக்கை ஏற்கனவே விசாரித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில் மாற்று அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day