டெல்லி கார் வெடிப்பு : 3 மருத்துவர்கள் உள்பட 4 பேர் விடுதலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் விடுவித்தனர். 

டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. வெடி பொருட்கள் சேகரிக்கப்பட்ட அரியானா, உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்ஐஏ விடுவித்துள்ளது. உமருக்கும், அல்-பலா பல்கலைக்கழக மருத்துவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Night
Day