பாஜக பிரமுகரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியால் ஓட ஓட துரத்தி வெட்டும் காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் பாஜக பிரமுகரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியால் ஓட ஓட துரத்தி வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருங்களத்தூர் சீனிவாச நகர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மண்டல செயலாளராக உள்ளார். பெருங்களத்தூர் ரயில் நிலையம் சுரங்கபாதை அருகே தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் செந்தில் சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்க முயன்றுள்ளது. தொடர்ந்து செந்திலை விடாமல் துரத்திய கும்பல் ஓட ஓட வெட்டியது. அப்போது அங்கு போலீசார் ரோந்து பணியில் இருப்பதை பார்த்து மர்ம கும்பல் தப்பியோடியது. இதையடுத்து காயமடைந்த செந்திலை மீட்ட போலீசார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தப்பியோடிய, நரேஷ், விக்னேஷ், விஜய், சுதாகர் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், கடந்த ஒரு வருடமாக செந்திலுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் முக்கிய நபரான நந்தா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Night
Day