'வணக்கம்' எனக்கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

வரவிருக்கும் ஆண்டுகளில் வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, வணக்கம் என்று தமிழில் உரையை தொடங்கினார். கோவை புனித மண்ணில் மருதமலை முருகனை வணங்குவதாக தெரிவித்த பிரதமர் மோடி, கோவை என்பது கலச்சாரம், பணிவு கொண்டது என்றும் தென்னகத்தின் சக்தி பீடம் கோவை என்றும் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கோவை ஜவுளித்துறை நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு பங்காக உள்ளதாகவும், கோவையை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராகி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இயற்கை விவசாயம் என்பது விஷேசமானது என்றும் தனது இதயத்திற்கு இயற்கை விவசாயம் நெருக்கமானது என்றும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தான் இங்கு வராமல் போய் இருந்தால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும் என்றும் கூறினார்.

நமது நாட்டின் இளைஞர்கள் விவசாயத்தை நவீனமாக்குவதாகவும், வரவிருக்கும் ஆண்டுகளில் வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் பெருமிதத்துடன் கூறினார். மேலும், இயற்கை உரங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு - சிறு விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது உட்பட மத்திய அரசின் சாதனைகளை பிரதமர் மோடி பட்டியலிட்டார்.


Night
Day