வீட்டில் தனியாக இருந்த 2 சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் - ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தேனாம்பேட்டையில் இரண்டு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். 

தேனாம்பேட்டையில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர், தனது மனைவியுடன் வேலை விஷயமாக வெளியில் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் 4 மற்றும் 9 வயது பெண் குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். பின்னர் தம்பதியினர் வீட்டுக்கு வந்தபோது இரு குழந்தைகளும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்த்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது எதிர் வீட்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் வினோத், தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பெற்றோரிடம் சிறுமிகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வினோத்தை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day