பீகார் மாநில முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநில முதலமைச்சராக 10வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்றார்.

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. நேற்று நடைபெற்ற இந்த கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் பீகார் முதலமைச்சராகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில சட்டமன்ற குழு தலைவராகவும் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன்படி தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற  பதவியேற்வு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். 10வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நிதிஷ்குமாரைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்த விஜய்குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்ட 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், விஜய்குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டனர். பாஜகவில் 11 பேர், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 8 பேர் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ ஒருவர் என 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Night
Day