கேரளாவில் வாகன சோதனையில் ரூ.3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வாகன சோதனையின் போது 3 கோடியே 15 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வயநாடு போலீசார் இணைந்து கோழிக்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் நடத்தப்பட்ட சோதனையில், 3 கோடியே 15 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சல்மான், ஆசிப், ரசாக், முகமது பாசில் மற்றும் அப்பு முகமது ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், இவர்கள் வாரம் தோறும், பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் ஹவாலா பணத்தை கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.

Night
Day