ஏழுமலையானை தரிசனம் செய்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர்களுக்கு சாக்லேட் வழங்கி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார். 

திரெளபதி முர்மு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு முன் வராஹ சாமியை வழிபட்டார் .  ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் காரில் பயணித்த போது தன்னை காண ஏராளமானவர்கள் நின்றிருப்பதை பார்த்த அவர், காரில் இருந்து இறங்கினார். அங்குள்ள மக்கள் அருகில் சென்ற திரௌபதி முர்மு அவர்களுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி மக்களிடம் முர்மு நெருங்கி சென்று பேசியபோது அவரது பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் திணறிய காட்சி வெளியாகியுள்ளது. 

Night
Day