கார்த்திகை மாத பிறப்பு - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம், முதல் நாளிலிருந்து 48 நாட்கள் விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகிறது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 

கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருண்குமார் நம்பூதிரி, வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்கியது. மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறவுள்ளது.

பூஜையின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 26ம் தேதி மண்டல பூஜையும், முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். இதையடுத்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சரண கோஷம் விண்ணை பிளக்க சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில் கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் காலை முதலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதேபோல், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது. அதிகாலை முதலே குற்றாலத்தில் குவிந்த பக்தர்கள் நீராடிய பிறகு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, நெல்லை சந்திப்பு சாலையில் உள்ள குமரன் சாமி கோயிலில் பக்தர்கள் சபரிமலை செல்வதற்காக விரதத்தை துவங்கினர். ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிந்த ஐயப்பன் பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒரு மண்டல விரதமிருந்து யாத்திரி செல்லும் ஐயப்ப பக்தர்கள் திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் சன்னதி, மற்றும் ஐயப்பன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாலையணிந்தனர்.

varient
Night
Day