திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அர்ஜுன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 
தனது இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளதாக தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் பிரபல திரைப்பட நடிகர் அர்ஜுன் தனது குடும்பத்துடன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். வேத பண்டிதர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் அளித்து ஆசி வழங்கினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அர்ஜுன், திருப்பதி மலைக்கு வருவதால் பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைப்பதாக தெரிவித்தார். 

Night
Day