நிலப் பிரச்னையால் இருதரப்பினர் மோதும் சிசிடிவி காட்சி - 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடப்பிரச்னை தகராறில் உறவினர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி பழனிசாமியின் உறவினர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இடப்பிரச்னை தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Night
Day