கோவையில் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி தற்போதும் அதிர்ச்சியில் உள்ளார் - மகளிர் ஆணைய தலைவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் மூன்று கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவி தற்போதும் அதிர்ச்சியில் உள்ளதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தின் பின்புறம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவியையும், தாக்குதலுக்குள்ளான அவரது ஆண் நண்பரையும் கோவை அரசு மருத்துவமனையில் சந்தித்து மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண் தற்போதும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தரப்படும் எனக்கூறிய குமரி, கடும் தண்டனைகள் இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்றார்.

Night
Day