சுட்டுப்பிடிக்கப்பட்ட மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட மூன்று பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

கோவை விமான நிலையம் பின்புறத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் துடியலூர் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். சுட்டுப்பிடிக்கப்பட்ட சிவகங்கையை சேர்ந்த குணா, சதீஷ், கார்த்திக் ஆகிய மூவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, பொது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள மூன்று பேரிடமும், நீதிபதி நேரில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதா அல்லது சிகிச்சைக்காக மருத்துவமனையில் வைத்திருப்பதா என்பது நீதிபதி விசாரணைக்கு பிறகு முடிவு செய்யப்படும்.

Night
Day