ஆட்சியர் அலுவலம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கலசப்பாக்கம் அடுத்த கீழ்தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் - பூங்கொடி தம்பதியினர். இவர்களுக்கும் இவர்களது உறவினர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் அளிக்க சென்ற தம்பதியினரிடம் அதிகாரிகள் வேறொரு கூட்டம் நடப்பதால் மனு வாங்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த தம்பதி மறைத்து கொண்டு பெட்ரோலில் உடலை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். இதில், காயமடைந்த தம்பதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day