கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிஐ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் என 25 பேரிடம் சிபிஐ இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. நேற்று முன் தினம் 11 பேரிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று 6 பேருடன் நேற்று முன் தினம் விசாரிக்கப்பட்ட 11 பேரில் 2 பேர் என மொத்தம் 8 பேரிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று விசாரணை நடத்தப்பட்ட ஒருவர் உட்பட  9 பேரிடம் விசாரணை நடைபெற்றது. எனவே, கடந்த 3 தினங்களில் 25 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடைபெற்றது. கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அழைப்பு விடுத்தது, வாகனங்களின் உரிமம், சிகிச்சையில் சேர்க்கப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

varient
Night
Day