4000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக விவசாயிகள் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் பணியை அதிகாரிகள் நிறுத்தியதால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெவித்துள்ளனர். இரும்பாடி ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் அறுவடை முடிந்து கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையில், இடப்பற்றாக்குறை அதிகாரிகள் நெல் கொள்முதலை திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளன. விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Night
Day