3 கடைகளில் ரூ. 5 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சையில் அடுத்தடுத்து 3 கடைகளில் 5 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தெற்கு வீதியில் உள்ள ஜவுளிக்கடையின் மாடி வழியாக கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் பணப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதேபோன்று அடுத்தடுத்துள்ள இரு கடைகளிலும் மாடி வழியாக கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருக்க கடையில் இருந்த சிசிடிவி ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். 3 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Night
Day