மயிலாடுதுறையில் பள்ளி வாகனத்தை வழிமறித்து போதை ஆசாமிகள் தகராறு

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே குடிபோதையில் இளைஞர்கள் தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து அராஜகத்தில் ஈடுபட்ட போது மாணவர்கள் அலறியது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசலங்குடி கிராமத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்தை 3 இளைஞர்கள் மதுபோதையில் வழிமறித்து கல்வீசித் தாக்கி உள்ளனர். இதனால் பேருந்தில் இருந்த மாணவர்கள் பயந்து அலறி உள்ளனர். பின்னர் அந்த இளைஞர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், போதையில் அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Night
Day