95 வயது மூதாட்டியின் இறப்பை கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, 95 வயது மூதாட்டியின் இறப்பை கேக் வெட்டி தங்களது துக்கத்தை மகிழ்ச்சியோடு குடும்பத்தினர் கொண்டாடினர்.    

பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த 95 வயதான மூதாட்டி வெள்ளையம்மாள். இவருக்கு ஆறு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், இவர் இறப்பதற்கு முன்பு தனது குடும்பத்தினரிடம்  தான் உயிரிழந்தால் தன்னை ஆட்டம் பாட்டதோடு மகிழ்ச்சியோடு என்னை அடக்கம் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், அவரது ஆசைக்கிணங்க குடும்பத்தினர்  மேளதாளம் முழங்க,  பட்டாசு வெடித்து மூதாட்டியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று கேக் வெட்டி தங்களது துக்கத்தை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினர்.

Night
Day